கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர ஆவரங்காடு பகுதி மக்கள் கோரிக்கை
வல்லபாய் தெருவில் தேங்கி கழிவுநீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
Update: 2023-12-24 11:04 GMT
கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர ஆவரங்காடு பகுதி மக்கள் கோரிக்கை
சிவகங்கை நகர் ஆவரங்காடு வல்லபாய் தெருவில் கழிவு நீர் ரோட்டில் ஓடுவதால் நோய் பரவும் அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர். சிவகங்கை நகர் 22வது வார்டு ஆவரங்காட்டில் உள்ளது வல்லபாய் தெரு. இந்த தெரு ஆவரங்காட்டில் இருந்து தொண்டி ரோடு மேம்பாலத்தை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. பழைய அமுதா தியேட்டர், அம்பேத்கர் தெரு பகுதியில் இருந்து தொண்டி ரோடு மேம்பாலத்தில் கீழ் பகுதியில் இந்த பகுதிக்கு வரக்கூடிய கழிவு நீர் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் முழுவதும் வல்லபாய் தெருவில் தேங்கி கிடக்கிறது. அடைப்பை சீரமைத்து கழிவு நீர் செல்ல நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்