பழமையான ஈமசின்ன கல்வட்டம் கண்டுபிடிப்பு !

திண்டுக்கல் மாவட்டத்தில் குருடன் பாறை அடிவாரத்தில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2024-03-28 10:44 GMT

கல்பதுகை

திண்டுக்கல் வரலாற்று குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர், ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள் சாமி மற்றும் மாணவர்கள் ஹரி பிரசாத், மோகன் திருமலை ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 5000 ஆண்டுக்கு முற்பட்ட ஈமசின்ன கல்வட்டம், பெருங்கற்காலத்தில் மனிதன் வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் இறந்தவர்களை பெரிய பெரிய சீரற்ற கற்களை வட்டமாக வைத்து,அதன் நடுவில் செவ்வக வடிவில் பலகை கற்களை ஊன்றி வைத்து,அதனுள் இறந்தவர்களை புதைப்பர். இந்த செவ்வகவடிவ பலகை கல் பெட்டிபோல் இருக்கும். இது கல்பதுகை எனப்படும்.
Tags:    

Similar News