திண்டுக்கல் மாவட்டத்தில் தாயார் நிலையில் உள்ள மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையடுத்து தாயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.

Update: 2024-05-19 14:53 GMT
தாயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 10 தீயணைப்பு நிலையங்களில் மீட்பு பணிக்கு தேவைப்படும் பொருள்களோடு 200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்கள் மழை பாதிப்புகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை உடனடியாக மீட்கும் வகையில்,

திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மீட்பு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

 மழை பாதிப்புகளில் யாரேனும் சிக்கினால் 94450 86325ல் 24 மணி நேரமும் அழைக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மின்கம்பம் சாய்ந்தது மரங்கள் முடிந்தது குறித்தும் உடனடியாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News