அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பல மாதங்களாக அவர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Update: 2024-02-08 02:39 GMT

ஆட்சியர் ஆய்வு 

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார் அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகம் வெளியே காத்திருந்த முதியவர் ஒருவரை அழைத்த மாவட்ட ஆட்சியர் எதற்காக வந்து உள்ளீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு அந்த முதியவர் நான் நெல்லிவாசல் நாடு பகுதியில் வசித்து வருகிறேன் ஆறு மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் இதுவரை தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கூறினார் .

இதனால் ஆவேசப்பட்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திருப்பத்துர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணனை பார்த்து கோ இன் இன்சைடு என்று கூறி இவரின் மனுவை எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் எனக்கு கூறினார் அதே போல் வட்டாட்சியர் அலுவலகம் வெளியே வரிசையாக நின்று கொண்டிருந்த அனைத்து மனுதாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார் அப்போது மனுதாரர்கள் அனைவரும் பல மாதங்களாக நாடையாக நடக்கிறோம் எந்த பயனும் இல்லை என ஆதங்கம் தெரிவித்தனர். உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் பானு மற்றும் தாசில்தார் என அனைவரிடமும் உடனடியாக இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில தினங்களில் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அலற விட்டு வரும் சம்பவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News