பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு

பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-20 13:50 GMT

அதிகாரிகள் ஆய்வு 

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து பகுதிகளிலும் வாக்கு பெட்டி இயந்திரங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது..  இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது நேற்று இரவு முதல் வாக்குப் பெட்டி இயந்திரங்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில்,

உள்ள நா.மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கபட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் வைக்கும் பணி நடைபெற்றது..  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா மற்றும் பொள்ளாச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா மற்றும் வருவாய்த் துறையினர் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

பின்னர் பொள்ளாச்சியில் வாக்கு என்னும் மையத்தில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா செய்தியாளர்கள் பேசியபோது.. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை மற்றும் மடத்துக்குளம் என 6 சட்டமன்ற தொகுதியில் 1715 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான இயந்திரங்களை வாக்கு என்னும் மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையினர் என 250 -க்கும் மேற்பட்ட போலீசார் மூன்று சுற்றுகளாக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் 250 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் வாக்கு என்னும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.. அதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறையில் பொள்ளாச்சியில் மட்டும் 44 கோடியே 80 லட்சத்தி 46914 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.. 

Tags:    

Similar News