அதிமுக நிர்வாகிகளுக்கு காலண்டர் மாவட்ட செயலாளர் வழங்கினார்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 20 ஆயிரம் அதிமுக நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டார்;
Update: 2023-12-29 07:49 GMT
அதிமுக நிர்வாகிகளுக்கு காலண்டர் மாவட்ட செயலாளர் வழங்கினார்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 20 ஆயிரம் அ தி மு க நிர்வாகிகளுக்கு காலண்டர் வழங்கும் விழா தலைவாசலில் நடைபெற்றது. விழாவிற்கு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நல்லதம்பி தலைமை தாங்கினார். சேலம் புறநகர் அ தி மு க மாவட்ட செயலாளர் ஆர் இளங்கோவன் 2024-ம் ஆண்டிற்கான காலண்டர் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, பேரூர் செயலாளர்கள் ராஜேந்திரன், இளவரசு, பழனிசாமி, ஸ்ரீ குமரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் வரகூர் ராமசாமி, லத்துவாடி குழந்தைவேல், நாவக்குறிச்சி முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிழைசெயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.