அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கொலை வழக்குகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனே அரசின் நிவாரணம் கிடைக்க விரைந்து செயல்பட்ட காவலர்களை எஸ்பி பாராட்டினார்.;
Update: 2024-03-02 08:33 GMT
எஸ்பி
நெல்லையில் கொலை வழக்குகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனே அரசின் நிவாரணம் கிடைக்க எஸ்பி சிலம்பரசன் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதில் சி பிரிவு அதிகாரிகளின் செயல்பாட்டால் குறுகிய காலத்தில் 18 கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 43 பேருக்கு ரூ.52 லட்சம் நிவாரணம் பெற்று கொடுத்துள்ளனர். விரைந்து செயல்பட்ட சி' பிரிவு அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.