ஆட்டோவில் பயணி விட்டுச் சென்ற நகைப்பையை ஓட்டுநர் மீட்டு ஒப்படைப்பு

பயணி தவற விட்டு சென்ற நகை அடங்கிய பையை ஆட்டோ ஓட்டுனர் காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார்

Update: 2024-02-23 11:53 GMT
நகை மற்றும் பை உரியவரிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூரில் ஆட்டோவில் பயணி விட்டுச் சென்ற நகைப்பையை ஓட்டுநர் மீட்டு காவல் துறையினர் முன்னிலையில் வியாழக்கிழமை ஒப்படைத்தார். புதிய பேருந்து நிலையத்திலிருந்து சோழன் சிலை ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனின் ஆட்டோவில் புதன்கிழமை 4 பேர் ரயில் நிலையத்துக்கு பயணம் செய்தனர். ரயில் நிலையத்தில் இறங்கியபோது, கைப்பையை பயணிகள் விட்டுச் சென்றனர். இக்கைப்பையை ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன், அழகுபாண்டியன், காமணன் ஆகியோர் பிரித்து பார்த்தபோது, உடைகளும், நகைகளும் இருந்தன. இப்பையை மூவரும் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இது குறித்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி. சந்திரா விசாரித்தபோது, அப்பை கேரளத்தைச் சேர்ந்த புருஷோத்தமனுடையது என்பதும், தஞ்சாவூரில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்துவிட்டு மீண்டும் எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக அவசரமாக சென்றபோது இப்பையை தவற விட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் முன்னிலையில், புருஷோத்தமனிடம் சோழன் சிலை ஆட்டோ ஓட்டுநர்கள் இப்பையை வியாழக்கிழமை ஒப்படைத்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் ராமச்சந்திரன், அழகுபாண்டியன், காமணன் ஆகியோரை காவல் துறையினர் பாராட்டினர்.
Tags:    

Similar News