ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓட்டுனர்கள் திரண்டதால் பரபரப்பு
மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-01-19 06:52 GMT
நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில் சாலையில் ஏதேனும் விபத்து ஏற்படுத்திவிட்டு, சம்பவ இடத்தை விட்டு ஓட்டுனர் தப்பி சென்றால், அந்த ஓட்டுனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அல்லது 7 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சட்டதிருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்க முடிவு செய்து அகில இந்திய உழைப்பாளர் ஓட்டுனர் சங்கத்தினர் 30 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர். அப்போது அரியலூர் நகர காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரப்பு ஏற்பட்டது. கடந்த சிலநாட்களுக்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.