3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் குடியிருப்பு பகுதியில் மரக்கிளைகளில் சுற்றி திரிந்த பாம்பால் பொதுமக்கள் அச்சமடைந்தனர், சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்தனர்.

Update: 2024-07-03 07:22 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ. சி நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள நான்கு மர கிளைகளில் சாரை பாம்பு ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுற்றி வந்துள்ளது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சாரைப்பாம்பை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்த நிலையில் சுமார் 3 மணி நேரம் 5 அடி உயரம் கொண்ட சாரை பாம்பு 4 மரங்களின் கிளைகளுக்குள் ஓடி ஒளிந்து போக்கு காட்டியது.

மர கிளையிலிருந்து பாம்பை எடுக்க தீயனைப்பு துறையினர் முயன்ற போது கீழே விழுந்த பாம்பை ஆராய்ச்சிபட்டி பகுதியை சேர்ந்த விளம்பர பிரியரான இளைஞர் ஒருவர்  பாம்பை கையால் பிடித்து சுற்றி இருந்த பொதுமக்கள் பார்க்குமாறு சுற்றியபோது பாம்பு அவரது கையை கடித்தது அவரிடமிருந்து பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர் இளைஞருக்கு அறிவுரைகள் கூறி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்து அவரது நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த இளைஞரோ மருத்துவமனைக்கு செல்லாமல் சிகிச்சையும் பெறாமல் தற்போதும் வரை விஷம் ஏறாமல் சுற்றி திரிவது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ள முட்புதர்களை அப்புறப்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனபோக்கில் செயல்படுவதால் தினதோறும் ஏராளமான பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டு பகுதியில் உள்ள முட்பூதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News