வனத்துறை வாகனத்தில் பள்ளி குழந்தைகளை அழைத்து சென்ற வனத்துறையினர்
கூடலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பள்ளி குழந்தைகளை வனத்துறை வாகனத்தில் அழைத்து சென்று வனத்துறையினர் பள்ளிகளில் விட்டனர்.;
Update: 2023-12-22 09:30 GMT
வனத்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட மாணவிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டம் பிதர்காடு வன சரகம் நெல்லியாளம் பிரிவு ஏலமன்னா, பெரும்கரை, உப்பட்டி ஆகிய இடங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரை படி இன்று காலை பெரும்கரை , தொன்டியாளம் சுற்றுவட்டார பள்ளி குழந்தைகளை வனத்துறை வாகனத்தில் அழைத்துக்கொண்டு பந்தலூரில் இறக்கிவிடப்பட்டனர்.