உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த முன்னாள் முதல்வர்
அரூரில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெற்ற உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி டிராக்டரை ஓட்டி சென்றார்.;
Update: 2024-02-06 02:36 GMT
எடப்பாடி பழனிசாமி
தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சியகம் கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிரக்ட்டரை ஓட்டி சென்றார். இதனை தொடர்ந்து கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.