1000 பேருக்கு நிவாரண பொருட்கள் - முன்னாள் அமைச்சர்  தகவல்

அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 1000 பேருக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்;

Update: 2023-12-24 09:55 GMT
முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல். எ

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , சமீபத்தில் பெய்த மழையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவளம் கே.எஸ்.எஸ். நகர், தோவாளை அண்ணாநகர், திருப்பதிசாரம் நெசவாளர் காலனி, இரவிபுதூர் வண்ணான்குடியிருப்பு மற்றும் தேரூர் உதிரப்பட்டி, பாலகிருஷ்ணன்புதூர், இந்திராகாலனி ஆகிய பகுதிகளை சேர்ந்தமக்கள் பாதிக்கப்பட்டனர். முகாம்களில் தங்கி இருந்த இவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டது. 

Advertisement

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தற்போது குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 1000 பேருக்கு அரிசி, பலசரக்கு பொருட்கள், காய்கறிகள், துணிமணிகள், போர்வை உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் தோவாளையில் உள்ள எம்.எல்.ஏ. முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகுதி, பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News