விபத்தில் சிக்கிய வரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சர்

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

Update: 2023-10-25 06:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டம் முடிந்த்தும் சிவகாசியில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து கொண்டிருந்த போது விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்துள்ளார். உடனே இதை பார்த்த ராஜேந்திர பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, பின்னர் தனது அருகில் இருந்த அதிமுக மருத்துவர் விஜய்ஆனந்த் என்பவர் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தார். அதன் பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News