பொங்கலுக்கு கரும்பு விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் செய்யணும் !
பொங்கலுக்கு கரும்பு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தைப்பொங்கலுக்காக சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை இடைத்தரகர்கள் இன்றி அரசு அதிகாரிகள் நேரடி விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பு தாமதமாக அறிவிப்பதால் கரும்பு குறைவான விலைக்கு போவதாகவும் விவசாயிகள் கோரிக்கை...
தைப்பொங்களுக்கான பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளது அதில் ரூ 1000,முழு கரும்பு ஒன்று,பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.... ஒரு முழு கரும்புக்கு தமிழக அரசு சார்பில் 33 ரூபாயும் ஏற்று கூலி போக விவசாயிக்கு 24 ரூபாய் தொகையாக கிடைக்கிறது.... இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்... ஆனால் இடைத்தரகர்கள் நுழைவதால் ஒரு கரும்புக்கு 18 முதல் 19 வரை மட்டுமே தற்பொழுது கிடைப்பதாகவும் இதை அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி இடைத்தரகர்கள்யின்றி விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் நேரடியாகவே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் தாமதமாக அறிவித்தால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அரசுக்கு வழங்குவதா அல்லது இடைத்தரகர்களுக்கு வழங்குவதா? என அவதிக்கு உள்ளாவதாகவும் கடைசியாக இடைத்தருகளுக்கு மிக குறைவான விலைக்கு கரும்புகளை விற்பதாகவும் எனவே தமிழக அரசு முன்கூட்டியே அறிவித்தால் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளை அரசு சார்பில் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு கரும்புகளை அனுப்பப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.... மேலும் பூலாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்லிருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்புகள் டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது....