தகாத உறவு: தாத்தாவை கொலை செய்த பேரன்
முத்தூர் அருகே பேரனே தாத்தாவை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-03 12:37 GMT
தாத்தாவை கொன்ற பேரன்
கோப்பு படம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே நகரையூறில் வசித்து வந்தவர்கள் முனியப்பன் (60) , பேரன் அருண்குமார் (27). போதைக்கு அடிமையான அருண்குமார் மேலும் திருமணம் ஆன பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துவைக்கும் படி அருண்குமார் தாத்தா முனியப்பனிடம் கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடயே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று போதையில் வந்த அருண்குமார் தாத்தாவை அவர் வைத்திருந்த கைத்தடியை பிடுங்கி தாக்கியுள்ளார். இதனால் மயங்கி கீழே விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேரன் அருண்குமாரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.