செல்போன் திருடனை விரட்டி பிடித்த தலைமைக் காவலர்!
கோவை அருகே செல்போன் திருடனை விரட்டி பிடித்த தலைமை காவலரை பொதுமக்கள் பாராட்டினர்.
கோவை:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்ததுள்ளார்.ஈஷா யோகா மையம் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்போது சட்டைபையில் வைக்கபட்டிருந்த செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இதுகுறித்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் ராஜ் தெரிவித்துள்ளார்.
பேருந்து காந்திபுரத்தில் நிறுத்தபட்ட நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் புற காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் கந்தசாமியிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் பேருந்தில் பயணித்தவர்கள் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது செல்போனை திருடிய நபர் பேருந்தில் இருந்து தப்பி ஓடுவதை கண்ட காவல்துறையினர் அந்த நபரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதன் காரணமாக காந்திபுரம் நகர பேருந்து நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. செல்போனை திருடனை போலீசார் விரட்டி பிடித்து துரிதமாக செயல்பட்ட காவலர்களின் செயலுக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.