திறந்து 6மாதத்தில் பூமிக்குள் புதைந்த நலவாழ்வு மையம்!

திருச்சி மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 8 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட தேசிய நகர்ப்புற சுகாதார மைய கட்டிட தரைத்தளம் உள்வாங்கி பழுதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Update: 2024-03-01 11:20 GMT
திருச்சி மாநகராட்சி 43 வது வார்டுக்கு உட்பட்ட தெற்குகாட்டூர் அம்பேத்கார் நகர் பகுதியில் 15 வது நிதி குழு தேசிய நகர்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய நகர்புற சுகாதார வளாகம் கட்டப்பட்டது அப்படி கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்படி திறக்கப்பட்டு சுமார் 8மாதத்திற்கு உள்ளாகவே கட்டடத்தில் உள்ள 2 ரூம்களிலும் போடப்பட்டிருந்த தரைதளம் உள்வாங்கியதால் அதில் போடப்பட்டிருந்த டைல்ஸ் உடைந்து மிகவும் சேதம் ஆனது புதிதாக கட்டடம் கட்டி 8 மாதத்திற்குள் அந்த கட்டிடம் இப்படி இவ்வளவு மோசமாக போனதற்கு காரணம் தரம் இல்லாமல் செய்யப்பட்ட வேலை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பழுதான தரை தளத்தை பெயர்த்து எடுத்துவிட்டு புதிதாக தரைத்தளம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. தரைதளமே இவ்வளவு சீக்கிரத்தில் பழுதானது என்றால் அந்த கட்டிடத்தின் சிற தன்மை எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே இந்ததேசிய நகர்ப்புற சுகாதார மைய கட்டிடத்தை ஆய்வு செய்வதோடு இந்த கட்டிடத்தை காண்ட்ராக்ட் எடுத்து கட்டிய ஒப்பந்ததாரர் மீதும் இதை கண்காணித்த மாநகராட்சி அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News