சுயேச்சை கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
நிலக்கோட்டையில், அரசு நிதி ரூபாய் ஒரு கோடியை, 40 லட்சம் என்ன ஆச்சு? என்ற சுயேச்சை கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-01-06 06:53 GMT
நிலக்கோட்டை யூனியனில், அரசு நிதி ரூபாய் ஒரு கோடியை, 40 லட்சம் என்னானது என சுயேச்சை கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை யூனியனில்,இன்று அதிமுக சேர்மன் ரெஜினா நாயகம் தலைமையில், துணை சேர்மன் யாகப்பன் முன்னிலையில் நடைபெற்றது .கவுன்சிலர்கள் கூட்டத்தில், அரசு நிதி ரூபாய், ஒரு கோடியை 40 லட்சம் என்னாச்சு என, சுயேச்சை கவுன்சிலர் கணேசன் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கூட்டத்தில், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கப்சிப் என, அமைதி காத்தனர்.