வீட்டிற்குள் நுழைந்து மிரட்டல் விடுத்தவர் கைது.

கடம்பன்குறிச்சியில் முன் விரோதம். அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்தவர் கைது.

Update: 2023-12-25 16:31 GMT
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, கடம்பன்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் மனோ என்கிற இளவரசன் வயது 49. அதே பகுதியில் வசித்து வந்த ஜெயபால் வயது 51 என்பவருக்கும் இளவரசனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக ஜெயபால் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள கன்னிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊர் திரும்பிய ஜெயபால், டிசம்பர் 24ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், ஏற்கனவே முன் விரோதத்திலிருந்த, இளவரசன் வீட்டுக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக இளவரசன் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்த ஜெயபாலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News