கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது
நாகை மாவட்டம்,பாப்பாகோவில் பகுதியில் கள்ளசாராயம் பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-03 09:23 GMT
கள்ளச்சாராயம் பதுக்கியவர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் நாகை நகர காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பாப்பா கோவில் பகுதியில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் அய்யாதுரை மகன் பழனி(39) என்பவர் கைது செய்து அவரிடமிருந்து 615 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்,