காளை மாட்டை திருடியவர் கைது
பட்டிமார் மேட்டாங்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட காளை மாட்டை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-04 05:55 GMT
திருவாரூர் மாவட்டம் பெருகவழந்தான் காவல் சரகம் பட்டிமார் மேட்டாங்குளம் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த இரு காளை மாடுகளில் ஒரு மாட்டை திருடி சென்ற செந்தாமரைகண் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் நல்லதம்பி என்பவர் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் கட்டி வைத்திருந்த காளை மாடு மீட்கப்பட்டது. இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.