தோட்டத்தில் மோட்டார் திருடியவர் கைது

வள்ளியூர் அருகே தோட்டத்தில் மின் மோட்டார் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-28 02:58 GMT

பைல் படம் 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குமாரபுதூர் குடியிருப்பை சேர்ந்த சுப்பிரமணி நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது மோட்டார் அறையினுள் இருந்த 5HP மின் மோட்டாரை காணவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரை தொடர்ந்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு மோட்டார் திருடிய சுமன் என்பவரை நேற்று (ஜூன் 27) கைது செய்தனர்.
Tags:    

Similar News