நெல்லையில் நின்று கொண்டிருந்தவரை மிரட்டியவர் கைது
நெல்லையில் நின்று கொண்டிருந்தவரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 09:41 GMT
கோப்பு படம்
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் கணபதி,இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டு அருகே கணபதி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த விஸ்வநாதன் கணபதியிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி விஸ்வநாதனை கைது செய்தனர்.