வாளைக் காட்டி போலீசாரை மிரட்டியவர் கைது
ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை வாளை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2023-10-22 02:54 GMT
சிவகங்கை நகர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் அண்ணாமலை நகர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது கூத்தாண்டன் பேருந்து நிறுத்தத்தில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து(22) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் விசாரித்தார். அப்போது மாரிமுத்து சப்-இன்ஸ்பெக்டரை தான் மறைத்து வைத்திருந்த வாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி விரைந்து சென்று மாரிமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தார். மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.