பெண்ணை அவதூறாக பேசிய மிரட்டிய நபர் கைது
பெண்ணை அவதூறாக பேசிய மிரட்டிய நபரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்;
Update: 2024-02-23 06:39 GMT
மதன்
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் திருமணம் ஆகி தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடிக்கடி அவதூறாக பேசி வந்தும் செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த நபர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி விட்டு சென்றார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் அண்ணன் நேற்று புகார் அளித்ததின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்ட திருண்ணாமலை மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த மதன்(24), என்பவரை இன்று கைது செய்து ஒரு செல்போன் பறிமுதல் செய்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மதனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.