மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமையல் செய்து நூதன காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம், கள்ளி குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-27 17:49 GMT

ஆர்பாட்டம் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி குறிப்பாக கருவேப்பஞ்சேரி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கிடப்பில் கிடக்கும் பயணிகள் நிழற்குடையை முழுமையாக அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் சாலையோரம் சமையல் செய்து நூற்றுக்கும் மேற்பட்டோர் நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News