தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலகங்களை ஆய்வு செய்த மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட  பொது சுகாதாரப் பிரிவு அலுவலங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2024-01-25 09:45 GMT

குறைகளை கேட்டறிந்த மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட  பொது சுகாதாரப் பிரிவு அலுவலங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது அங்கு பணிபுரியும் அதிகாரிகள், தூய்மை காவலர்கள்,  மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி எவ்வாறாக பணி செய்கிறார்கள் எனவும் வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டார். 

Advertisement

இது போன்ற நிகழ்வுகளால் மாநகரம் மேலும் தூய்மை பெறுவதோடு மட்டுமல்லாது வரும் காலங்களில் முன்மாதிரி மாநகரமாகவும் தூய்மையான நகரங்களில் முதலிடத்தை பெறவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். 

ஆய்வின் போது திமுக பகுதி கழகச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார்,  ஜான் சீனிவாசன், பொன்ராஜ், மாதகராட்சி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News