கலைஞர் பல்பொருள் அங்காடியை அமைச்சர் திறந்து வைத்தார்

50 நரிகுறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2024-02-20 05:23 GMT

கலைஞர் பல்பொருள் அங்காடி

திருவண்ணாமலை நகராட்சி, ஈசான்ய மைதானம் அருகே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடியினை திறந்து வைத்து வருவாய் துறை சார்பில் 50 நரிகுறவர்களுக்கு பழங்குடியினர் சான்றினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News