புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர்
விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தார். விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தமிழ்நாட்டின் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை இரண்டாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர் .
இன்று துவங்கிய இந்த புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் முன்னிலையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் துவக்கி வைத்தார் இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை துவக்கிவைத்து பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் அவர்கள் இன்றைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வரும் செய்திகளில் 90 சதவீதம் உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டு வரும் செய்திகளாக இருப்பதாக கூறிய அவர் இதன் காரணமாக சமூக வலைதளங்களை தவிர்த்து விட்டு நல்ல பயனுள்ள புத்தகங்களை வாங்கி படியுங்கள் அறிவை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையுங்கள் என வருவாய்த்துறை அமைச்சர் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேசினார்