வெள்ளகோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளியரச்சல் கிராமம் மேட்டங்காடு வலசு மற்றும் லக்கும் நாயக்கன்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 1.11 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
வெள்ளகோவில் ஊராட்சி பகுதிகளில் ரூ 1.11 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் மலர்கொடி தலைமை தாங்கினார்.
அதன்படி வள்ளியரச்சில் ஊராட்சி மேட்டங்காடுவலசில் அனைத்து கிராம அண்ணா திட்டத்தின் கீழ் 56.02 லட்சம் மதிப்பீட்டில் மேட்டாங்காட்டு வலசு, ஏடி காலனி, சம்பந்தம் பாளையம், நாடார்பதி ஆகிய இடங்களில் ஆறு புதிய காங்கிரீட் சாலைகள் மற்றும் கணபதி பாளையத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதேபோல் லக்குமநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 55.50 லட்சம் மதிப்பில் அங்காளம்மன் நகர் காலனி, கம்பிளியம்பட்டி காலனி,
மேற்கு சாலைப்புதூர், லக்னநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் வீதி ஆகிய இடங்களில் கான்கிரீட் சாலைகள் லக்கனநாயக்கன்பட்டியில் கதிர் அடிக்கும் களம், கம்பளியம்பட்டி ஆதிதிராவிடர் காலனி சேமிப்பு கிடந்து அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். வெள்ளகோவில் கரூர் சாலையில் செயல்பட்டு வந்த ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முத்தூர் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது இதன் புதிய அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராசி முத்துக்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகன செல்வம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி முருகானந்தன்,
ஒன்றிய அவை தலைவர் தண்டபாணி, நகரவை தலைவர் குமரவேல், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒன்றிய குழு உறுப்பினர் தாசநாயக்கன்பட்டி லோகு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டன.ர்.