ஆலங்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
ஆலங்குடி அருகே புதிதாகக் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியினை அமைச்சர் துவங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-08 11:51 GMT
பூமி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கே.வி.கோட்டை ஊராட்சி, அரசடிபட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.12.20 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாகக் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (07.03.2024) அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்.
உடன் திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.