உத்தமசோழபுரம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் 15 வது நிதி குழு சுகாதார மானியம் 2022 - 23 திட்டத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி சுகாதார நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் மஞ்சுளா மாசிலாமணி,மருத்துவர் ஜனரஞ்சனி,சுகாதார ஆய்வாளர் பரமநாதன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார்,கிராம சுகாதார செவிலியர்கள் சந்தனமேரி,ஜமுனாராணி,நான்சி பிரிட்டோ மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.