மக்களுடன் முதல்வர் திட்டத்தால் மரக்காணம் பொலிவு பெறும் அமைச்சர் தகவல்
மக்களுடன் முதல்வர் திட்டத்தால் மரக்காணம் பொலிவு பெற்ற பகுதியாக மாறும் அமைச்சர் மஸ்தான் தகவல்;
By : King 24x7 Website
Update: 2023-12-30 18:03 GMT
மக்களுடன் முதல்வர் திட்டத்தால் மரக்காணம் பொலிவு பெற்ற பகுதியாக மாறும் அமைச்சர் மஸ்தான் தகவல்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு திட்ட முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய சேர்மன் தயாளன், பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆளவந்தார், துணை சேர்மன் பழனி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பலராமன், பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு முகாம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் பேசியது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொது மக்களின் நலன் கருதி கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளார். ஆனாலும் பொது மக்களின் கோரிக்கைகளை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என கருதி இத்திட்டத்தை செயல்படுத்தினார். இந்த முகாமில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இங்கு நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறைகளையும் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர். இங்கு பொதுமக்கள் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் கொடுப்பதற்கு சமமாகும். இந்த முகாமில் எத்தனை மனுக்கள் கொடுக்கப்பட்டது. எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் உடனடியாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். இந்த முகாமில் பட்டா மாற்றம் மின்சாரம் சாலை வசதி குடிநீர் வசதி வங்கிக் கடன் வசதி மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை மீனவர்களின் கோரிக்கை உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து அதை செயல்படுத்தப்படும். இதன் காரணமாக மரக்காணம் பகுதி பொலிவு பெற்ற பகுதியாக மாறும் என அவர் பேசினார்.