முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு !
பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-04 11:04 GMT
தமிழ்நாடு முழுவதும் ஊரக பகுதிக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை வருகிற 11-ம் தேதி, தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே நகர் புற பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை, கடந்த ஆண்டு கோவையில் தொடங்கி வைத்தார். வருகிற 11-ம் தேதி தருமபுரியில் தொடங்கி வைத்து, ரூ.500 கோடி மதிப்பில், முடிவுற்ற மற்றும், புதிய திட்டப் பணிகள் உள்ளிட்ட 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் கலைஞர், மகளிர் சுய உதவி குழுவினை, தருமபுரியில் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம இதே தருமபுரியில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு, விண்ணப்ப பதிவேற்றத்தினை தொடங்கி வைத்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும், 1.20 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கடந்த காலங்களில் முதல்வர், எம்எல்ஏ, எம்பிக்களை பார்க்க முடியாது. ஆனால் இன்றைய முதலமைச்சர் எளிமையாக இருக்கிறார். மக்களை அடிக்கடக நேரில் சந்திக்கிறார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தருமபுரி மாவட்டத்திற்கு 4 முறை வந்திருக்கிறார். எனவே மக்கள் தங்களது தேவைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுத்து, இதனை பயன்படுத்திக் கொற்ள வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.