கலைஞர் திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-18 08:45 GMT
கலைஞர் திருவுருவச் சிலைக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக திருச்சி கிழக்கு மாநகரம் கிழக்குத் சட்டமன்ற தொகுதி டி வி எஸ் டோல்கேட் ரவுண்டானவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவச்சிலை அமைய உள்ள பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் விழாவில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோஇருதயராஜ், அப்துல் சமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்