தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
தாராபுரம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பதிவேடுகள், மற்றும் மாத்திரை மருந்துகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், பாம்பு கடி மற்றும் நாய் கடி மருந்து இருப்பு உள்ளனவா என மருத்துவர்கள் இடம் கேட்டு தெரிந்து கொண்டார்.அதன் பிறகு பெண்கள் வார்டு பகுதியில் சென்று அமைச்சர் அங்கு நோயாளியின் படுக்கையில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அதனை பார்த்த அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஏமா நோயாளி பெட்டுல நான்கு பேர் அமர்ந்து உள்ளீர்கள் பெட்டு தாங்குமா? இது என்னமா கல்யாண மண்டபமா? என அங்கிருந்த பொது மக்களை பார்த்து நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.
அதன் பிறகு தலைமை மருத்துவரை ஏன் இவ்வாறு அனுமதிக்கிறீர்கள் என கேட்டார் அதற்கு மருத்துவர் விசிட்டிங் டைம் என்பதால் இவர்கள் வந்துள்ளனர்கள் சார் என தெரிவித்தார்.
அதன் பிறகு அங்கிருந்து சென்ற அமைச்சர் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதியவர்களை சந்தித்து எவ்வாறு அறிவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது நன்றாக மருத்துவர்கள் கவனித்துக் கொள்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நோயாளிகள் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் நாங்கள் நன்றாக இருப்பதாகவும் உள் நோயாளிகள் தெரிவித்தனர்.மேலும் மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவு, ஆண்கள் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு ,கண் புரை அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மருத்துவர்கள் இடம் குறை நிறைகளை கேட்டு அறிந்தார்.
அதன் பிறகு அமைச்சர் அரசு மருத்துவமனை நன்றாக இருக்கணும் மருத்துவர்கள் கவனமாக செயல்படுங்கள் என அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.அமைச்சரின் திடீர் ஆய்வால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.