அருப்புக்கோட்டையில் விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

Update: 2024-01-02 14:19 GMT

சைக்கிள் வழங்கிய அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அருப்புக்கோட்டை வட்டத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பள்ளி மாணவ மாணவியர்கள் நன்றாக படித்து பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், கல்வியும் சுகாதாரமும் தான் முக்கியம் என மனதில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகிறார்.

இதை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த விலையில்லா மிதி வண்டியை உங்களுக்கு வழங்குகிறோம் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News