அலுவலகத்தின் கதவின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்த மர்ம நபர்கள்
வட்டார கல்வி அலுவலகத்தின் கதவின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 03:49 GMT
அலுவலகத்தின் பூட்டு உடைப்பு
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் ரோவர் பள்ளி பின்புறம் உள்ள வட்டார கல்வி அலுவலகம் உள்ளது, இங்கு AEO -ஜோதிலெட்சுமி, மற்றும் அருண்குமார் ஆகியோருடன் எட்டு பேர் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி, மாலை அலுவலகப் பணி முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டி சென்ற நிலையில், மீண்டும், அக்டோபர் 30ஆம் தேதி அலுவர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்த்த போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தில் இருந்த அனைத்து பீரோக்களும், மேசை டிரா ஆரியது திறக்கப்பட்டும் இருப்பதைக் கண்டு, அதிகாரிகளுக்கும் போலீசாக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பவ இடம் சென்ற போலீசார், பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு. மேலும் அலுவலகம் மற்றும் பீரோவின் பூட்டை உடைத்த நபர்கள் யார் என்பது குறித்து, மோப்பநாய், மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.