நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்த எம்எல்ஏ

சில்லாரஅள்ளி கிராமத்தில் பல்நோக்கு மையக் கட்டிடம் அமைக்க பூமி பூஜை செய்து துவக்கி வைத்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ

Update: 2024-07-05 16:19 GMT

பூமி பூஜை 

இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,சில்லார அள்ளி ஊராட்சிமற்றும் சில்லார அள்ளி பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,ரூபாய் 10.00.இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News