மயங்கி விழுந்து மூதாட்டி பலி

கரூர் அருக்ற் சிறுநீரக பிரச்சனையால் அவதி பட்ட மூதாட்டி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-16 15:13 GMT
மூதாட்டி பலி

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குளத்தூர் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி சரஸ்வதி வயது 64. சரஸ்வதிக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தனது பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொண்ட போது, கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி இரவு 7:15- மணியளவில் சில மாத்திரைகளை எடுத்துக் கொண்டார்.

பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட சரஸ்வதியின் கணவர் ராமசாமி, தனது மனைவியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராமசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சரஸ்வதியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News