பெண்ணை கிண்டல் செய்தவருக்கு கத்திக்குத்து
விழுப்புரத்தில் பெண்ணை கிண்டல் செய்தவரை கத்தியால் குத்தி நபரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-02-28 15:06 GMT
பைல் படம்
விழுப்புரத்தில் பெண்ணை கிண்டல் செய்தவரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த, ஸ்ரீகாந்த் மகன் வெங்கடேசன்(30) இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி சிந்து(23) என்பவரை கேலி கிண்டல் செய்துள்ளார். தன்னுடைய அண்ணியை கிண்டல் செய்ததால், கோபமடைந்த சிந்துவின் மைத்துனர் அன்பரசன் வெங்கடேசனை திட்டி, கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். இதில் காயமடைந்த வெங்கடேசனை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து விழுப்புரம் நகர போலீசார் அன்பரசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.