நாமக்கல் கவுன்சிலர் இளம்பரிதியின் சிறப்பான பணிக்கு வார்டு மக்கள் பாராட்டு

மழைநீர் வடிகால்வாய், சாலைப் பணிகளை அமைத்த நாமக்கல் கவுன்சிலா் எம்பரர் வ.இளம்பரிதிக்கு வார்டு மக்கள் பாராட்டு;

Update: 2023-12-13 10:03 GMT

மழைநீர் வடிகால்வாய், சாலைப் பணிகளை அமைத்த நாமக்கல் கவுன்சிலா் எம்பரர் வ.இளம்பரிதிக்கு வார்டு மக்கள் பாராட்டு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 34 வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால்வாய், சாலை புதுப்பித்துக் கொடுத்த நகர் மன்ற உறுப்பினர் இளம்பரிதிக்கு வார்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர், அழகு நகர், அன்பு நகர், வள்ளுவர் நகர் ஆகியவை 34 வது வார்டுக்கு அடங்கியுள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து 30 ஆண்டுக்கு மேலாகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மழைநீர் வடிகால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டு, சிறுபாலங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் மழைநீர் கழிவுநீரோடு கலந்து அழகு நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள், மழைநீரும், கழிவுநீரும் சென்று மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதே போல் அன்பு நகர், முல்லை நகர் பகுதிகளிலும் சிறுபாலங்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அதனை அகற்றி விட்டு புதிய சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் செயலாற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு மொத்த மதிப்பீடாக ரூ. 27 லட்சத்து 20 ஆயிரம் செலவாகும் என அறிவிக்கப்பட்டது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட வேண்டி தொகையான ரூ. 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை நகர் மன்ற உறுப்பினர் எம்பரர் வ.இளம்பரிதி தனது சொந்த செலவில் வார்டு மக்களுக்காக கொடுத்துள்ளார். நமக்கு நாமே திட்டத்திற்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்கான காசாலையை நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஸ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்வில் 34 வார்டு செயலாளர் ஹரிஹரன், கணேசன், லட்சுமி பரிமளம் மற்றும் சுப்பிரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

புதிய சிறுபாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் செயலாற்ற தனது சொந்த நிதியை வழங்கியும், ஸ்பெக்ட்ரம் பள்ளியில் இருந்து திருச்சி சாலை பாலம் செல்லும் சாலை கடந்த 30 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட சாலை மிகவும் மோசமாக இருந்து, அதனால் தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் சிரமப்படுவடுவதை அறிந்த நகர் மன்ற உறுப்பினர் இளம்பரிதி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிளங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோரிடம் கோரிக்கை வைத்து, தற்போது சாலை அமைத்தும் கொடுத்துள்ளார். இதற்காக பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் நகர் மன்ற உறுப்பினர் இளம்பரிதிக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News