அரசு மருத்துவமனையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது!

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை மக்கள் சுற்றி வளைத்து பிடித்த நிலையில் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

Update: 2024-02-08 08:51 GMT

அரசு மருத்துவமனையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது

கோவை:மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் மரகதம். இவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரக வார்டில் சிகிச்சைக்காக கடந்த ஒரு மாத காலமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவத்தன்று மரகதம் தனது மகன் படுத்திருந்த தலையணை அடியில் மணிபர்ஸை வைத்துவிட்டு மகனின் அருகில் அமர்ந்திருந்து இருந்தார்.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மணிபர்ஸை திருடி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மரகதம் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.அங்கு வந்த பந்தய சாலை போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனிசாமி என்பதும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் அவரை விடுதலை செய்தனர்.
Tags:    

Similar News