வீட்டின் கதவை உடைத்து திருடியவர் கைது

அவிநாசிபாளையம் அருகே கண்டியன்கோவிலில் வீட்டின் கதவை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-02-16 07:06 GMT

கைது செய்யப்பட்ட மணி மாது 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயம்பாளையம் கண்டியன்கோயில் பகுதியில் வடிவேலன் என்பவர் கடந்த 4-ம் தேதி மாலையில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்ற சமயத்தில் கதவை உடைத்து 10 சவரன் தங்க நகைகள், பணம் மற்றும் TVS XL  இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்றது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா உத்தரவுப்படி பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினரான SI கோவிந்தராஜ், SSI வேலுச்சாமி, காவலர்கள் சரவணபிரபு, பழனி ஆண்டவர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில்  வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த இவ்வழக்கில்  சம்பந்தப்பட்ட குற்றவாளியான தர்மபுரியை சேர்ந்த மணிமாது என்பவரை கைது செய்து களவுச் சொத்தான 60,000/-  ரூபாய் பணம், 10 சவரன் தங்க நகைகளையும மற்றும் TVS XL  வாகனத்தையும் மீட்டனர்.

மேலும் விசாரணையில் குற்றவாளி அவினாசிபாளையத்தில் கடந்த 30 ஆம் தேதி மற்றொரு TVS XL வாகனத்தையும்  காமநாயக்கன் பாளையத்தில் 31 ஆம் தேதி தொட்டிபாளையத்தில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு TVS XL வாகனத்தையும் திருடி இருந்தது  தெரியவந்தது.இம்மூன்று வழக்குகளில் சம்மந்தப்பட்ட  களவுச் சொத்துக்களும் மீட்கப்பட்டது. மேற்படி குற்றவாளிக்கு சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. விசாரணை முடித்து   குற்றவாளி மணிமாதுவை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பல்லடம் கிளைச்சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News