பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
சின்னசேலம் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.;
Update: 2024-03-13 06:00 GMT
உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பங்காரத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் நவீன், 22; இவர் கடந்த 9ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் பைக்கில் நத்தக்கரையில் இருந்து பாண்டியன்குப்பத்திற்கு சென்றார். பாண்டியன்குப்பத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் நவீன் சென்ற பைக் விழுந்து விபத்துக்குள்ளா னது. இதில், படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார். சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.