மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

கந்திலி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-12-26 13:31 GMT

மாவட்ட ஆட்சியர் அஞ்சலி

 திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் முருகானந்தன் (38). இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி (26) என்ற மனைவியும் புவியரசு (3) மற்றும் கோபிநாத் என்ற கைக்குழந்தையும் உள்ளது.

  இந்நிலையில் நேற்று காலை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் வெட்ட வேலைக்கு சென்றார். மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது திடிரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது சுமார் 70 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதில் தலையில் அடிப்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.முருகானந்தனுக்கு மூலைச் சாவு அடைந்து உயிரிழந்தாக தகவல் தெரிவித்தனர் அதன் பேரில்அதை தொடர்ந்து தொழிலாளியின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு முருகானந்தனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

கை குழந்தையுடன் தவித்து நிற்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர் பாண்டியன் உடல் உறுப்பு தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொழிலாளியின் உடல் அரசு மரியாதையுடன் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News