வன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
Update: 2023-12-20 09:49 GMT
வனத்துறை வாகனம் மீது தாக்குதல்
பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள சேத்துமடை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சேத்துமடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு யானையை விரட்ட வன ஊழியர்கள் சென்றுள்ளனர்.அப்போது வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சோமு என்கின்ற சோமசுந்தரம் வாகனம் நிறுத்தியது தொடர்பக வன ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.தொடர்ந்து அரசு வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக வன ஊழியரான போத்தமடையை சேர்ந்த சிந்தன்னன் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.