பழுதான தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை வைத்து தள்ளும் அவலம் சமூக வலைதளங்களில் வைரல்
பழுதான தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை வைத்து தள்ளும் அவலம் சமூக வலைதளங்களில் வைரல்
Update: 2023-12-16 05:49 GMT
மத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து பழுதான நிலையில் பள்ளி மாணவர்களை வைத்து பேருந்து தள்ளப்பட்டுள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தில் உதயம் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த மாணவர்களின் வாகன போக்குவரத்திற்காக பள்ளியின் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பேருந்துகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வண்டியை மாணவர்கள் வைத்து தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பெற்றோர் பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி பேருந்து பழுதாகி பாதியிலேயே நின்ற நிலையில் பள்ளி மாணவர்களை வைத்து பள்ளி நிர்வாகம் பேருந்து தள்ளியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் அந்த பேருந்து தள்ளும் பொழுது அங்கிருந்த ஒருவர் வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார் அந்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து தனியார் பள்ளி DEO ரமாவதி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நாங்கள் மாதம் தோறும் பள்ளி முதல்வர் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து ஆலோசனை வழங்கி வருகிறோம். இதில் வண்டிக்கு Fc இன்சூரன்ஸ் பேருந்துக்கான தகுதி சான்று மற்றும் பேருந்து இயக்க கூடிய வகையில் பேருந்தை இயக்க வேண்டும் என்றும் மாணவர்களை ஒருபோதும் பேருந்தின் பழுதின் பொழுது தள்ள அனுமதிக்க கூடாது என்றும் பல முறை ஆலோசனை கூறி வந்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது இந்த சம்பவம் உடனடியாக விசாரித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு தகவல் அளித்து உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.