மாநகராட்சி பணியாளர் மீது தாக்குதல் ஒருவர் கைது
வெள்ளி சந்தை அருகே முன்விரோதம் காரணமாக மாநகராட்சி பணியாளரை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 07:26 GMT
கைது
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே குருந்தன் கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சின்னமுத்து (29). இவர் நாகர்கோவில் மாநகராட்சி ஆசாரிப்பள்ளம் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி சின்னமுத்துவின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் நிகழ்ச்சியில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. அங்கு இருந்தவர்கள் தகராறு விலக்கி தீர்த்து வைத்தனர். இதனால் அவர்களுடைய முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாரியப்பன், ராகுல், முத்தையன் மகன் மணிகண்டன், சரவணன் ஆகியோர் சின்னமுத்துவிடம் சமரசம் பேசலாம் என கூறி அவரை குருந்தன் கோடு டாஸ்மாக் கடை அருகில் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது முத்தையன் மகன் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் சின்ன முத்துவை தாக்கியுள்ளார். இதனை இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (28), செல்லதுரை தடுத்தனர். அவர்களையும் முத்தையன் மகன் மணிகண்டன் ஸ்க்ரூ டிரைவரால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து முத்தையன் மகன் மணிகண்டனை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.